For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிரைவிங் லைசென்ஸ் வாங்கப் போறீங்களா? உடல் உறுப்பை தானம் பற்றிய முடிவோட போகனும்...

By Mathi
Google Oneindia Tamil News

Driving Licence
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்போரிடம் உடல் உறுப்பு தானம் செய்யவது பற்றிய கேள்வியும் கேட்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 17 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். ஒரு நாளைக்கு 390 பேர் பலியாகின்றனர். இப்படி விபத்துகளில் சிக்கி படுகாயமடைவோருக்கு உரிய நேரத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காததால் மரணித்துப் போகிறவர்களும் உண்டு.

இதனால் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஒரு புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த மசோதாவின் நகல் போக்குவரத்துக்கு அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இம்மசோதாவின் படி, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்போரிடம் உடல் உறுபு தானம் செய்வது குறித்தும் கேள்விகேட்கப்படும். அதாவது டிரைவிங் லைசென்ஸ்க்கான விண்ணப்பத்தில் உடல் உறுப்பை தானம் செய்ய விரும்புகிறீர்களா? என்ற கேள்வியும் அதற்குப் பதிலாக ஆம் அல்லது இல்லை என்ற விருப்ப வாய்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கும் .இதைக் கண்டிப்பாக பூர்த்தி செய்தாக வேண்டும்.

நல்ல முயற்சிதான்! நடைமுறைக்கு வருகிறதா என பார்ப்போம்

English summary
Applying for a new driving licence? You might have to declare whether you want to donate any of your organs or tissues in case of a fatality. With 17 lives lost in road accidents every hour last year, and 390 fatalities recorded daily, the Union health ministry says organs donated from such victims with proper consent of their family members can help the country's abysmally low organ donation rate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X