For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அடையாற்றில் குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியாகிய டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியால் 1996 இல் இக்கல்லூரி சென்னையின் முதன்மைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் மரபு வழிப் பண்பாட்டினைக் கல்வியுடன் சேர்த்துக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு இகல்லூரி செயல்பட்டு வருகின்றது.

இக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 2012 செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.

பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியின் வரலாற்றையும், தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பதிவுகள், மின்னிதழ்கள், மின்னூல்கள், தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் தமிழ் இணையதளங்கள் குறித்துத் தமிழ்வழியில் வழங்கப்படும் விளக்கங்களை அறியலாம். துறைசார் வல்லுநர் பயிற்சியளிக்க உள்ளார்.

பதிவுக்கட்டணம்:

பேராசிரியர்கள் உருவா 200-00
ஆராய்ச்சி மாணவர்கள் உருவா 100-00

பதிவுக்கட்டணம் வரைவோலையாக

PRINCIPAL,
KUMARARANI MEENA MUTHIAH COLLEGE OF ARTS& SCIENCE,
GANDHI NAGAR, ADYAR, CHENNAI- 600 020

என்ற முகவரிக்குப் பதிவுப் படிவத்துடன் அனுப்பப்பெற வேண்டும்.

தொடர்புக்கு:

முனைவர் சீ.சாந்தா, சென்னை
9962426445

செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
http://muelangovan.blogspot.in/

English summary
A training programme onTamil internet has been arranged in Chennai, Kumara rani Meena Muthiah college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X