For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலம்பியாவில் கொகைன் கடத்தல் ராணி க்ரிசெல்டா சுட்டுக் கொலை

By Siva
Google Oneindia Tamil News

Griselda Blanco
மெடலின்: பிரபல போதைப் பொருள் கடத்தல் ராணியான க்ரிசெல்டா பிளான்கோ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

1970 மற்றும் 80களில் போதைப் பொருள் கடத்தலுக்கு பெயர் போனவர் க்ரிசெல்டா பிளான்கோ(69). புளோரிடாவில் நடந்த பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு காரணமாக இருந்தவர். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் மற்றும் தந்தைக்கு பதில் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட 2 வயது குழந்தையின் கொலை வழக்குளில் கடந்த 1985ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் 20 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் மெடலின் நகரில் உள்ள கறிக்கடையில் இருந்து வெளியே வந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றனர். இதில் க்ரிசெல்டாவில் தலையில் 2 குண்டுகள் பாய்ந்து அவர் இறந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்று சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடுவது க்ரிசெல்டாவின் ஐடியா. தற்போது அவரது ஐடியாவைப் பயன்படுத்தி அவரையே கொன்றுவிட்டனர். கொலைக்காரி, கடத்தல்காரி, கொக்கைன் ராணி என்று பெயர் எடுத்த அவருக்கு ஷாப்பிங் செய்வது, பியூட்டி பார்லர் செல்வது என்றால் அலாதி பிரியம்.

இது தவிர அவருக்கு படங்கள் என்றால் உயிராம். காட்பாதர் படத்தைப் பார்த்துவிட்டு தனது மகன்களில் ஒருவருக்கு மைக்கேல் கோர்லியோன் என்று பெயர் வைத்துள்ளார்.

English summary
Griselda Blanco(69) popularly known as 'Queen of Cocaine' was gunned down by motorists in Columbia. She was believed to be behind the idea of motorbike drive-by executions. Her own idea seemed to turned against her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X