For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மங்களூர் வனப்பகுதியில் போலீசாருடன் மோதல் - தமிழக நக்சலைட் பலி

By Mathi
Google Oneindia Tamil News

Naxal
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த நக்சலைட்டுகளுக்கும் கர்நாடக போலீசாருக்கும் இடையேயான மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மங்களூர் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக கர்நாடக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 6 பேர் கொண்ட நக்சல்கள் குழு நக்சல் ஒழிப்பு போலீசார் மீது செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு மோதல் நிகழ்ந்தது. இதில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயர் குப்புசாமி என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் தமிழ், கன்னட புத்தகங்கலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Naxalite was shot dead during combing operations launched by the Anti-Naxal Force (ANF) in Baginamale-Cheru reserve forest area near Subrahmanya on Wednesday. Combing operations were stepped up in the thick forests since the sighting of Naxals three days ago. However, the slain Naxal is yet to be identified.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X