For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கட்டண வசூல் நடைமுறைக்கு வருகிறது

By Mathi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.

ஜிப்மர் மருத்துவமனைக்குத் தன்னாட்சி அந்தஸ்து வழங்க 2007-ம் ஆண்டு மசோதா தயாரிக்கப்பட்டது. அப்போது கட்டண நடைமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போதுள்ள நிலை தொடரும் என்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நேரடியாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவின் விதிகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்றும், இதற்குத் தகுதியானவர்கள் மாத வருவாய் ரூ.2,500-க்குக் கீழ் இருப்பவர்கள் என்றும் சேர்க்கப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை மாத வருவாய் ரூ. 900 இருப்பவர்கள் ஏழைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர் அனைவரையும் மாத வருவாய் ரூ.900க்குக் குறைவானவர்கள் என்றே கணக்கில் கொண்டு, இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வருவாய் சான்றிதழ் எதுவும் கேட்கப்பட்டதில்லை. கடந்த 52 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்த இலவச சிகிச்சை என்ற நடைமுறை, தற்போதும் தொடர்வதாகத்தான் ஜிப்மர் மருத்துவமனை கூறி வருகிறது. ஆனால், மாத வருவாய் ரூ.2,500-க்குக் கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என்றும், செப்டம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவாய் சான்றிதழ் அவசியம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கட்டணம் எவ்வளவு?

க்ஸ்ரே (டிஜிட்டல்) ரூ.50, அல்ட்ரா சவுண்ட் ரூ.100, எலும்பு முறிவுக்கு கட்டுபோட ரூ.500, பேச்சு பயிற்சி, பரிசோதனை ரூ.1,000, காதொலி பரிசோதனை ரூ.1,000, முழு உடல் சோதனை ரூ.2,000, சி.டி. ஸ்கேன் ரூ.2,000, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ.4,500,ஆர்த்தோஸ்கோப்பிக் பயாப்ஸி ரூ.5,000, ட்டு மாற்று அறுவைச் சிகிச்சை ரூ.15,000.

English summary
Puducherry Jipmer Hospital withdraw free serivce and fix charges for service.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X