For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் சு.சாமி கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Subramanian Swamy
டெல்லி: இலங்கையுடனான மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். தமிழகம் வரும் சிங்களவர்களுக்கு பாதுகாப்பு தருவதில் முதல்வருக்கு தோல்வி ஏற்படுமானால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள் அடித்து திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து

வியாழக்கிழமையன்று சுப்ரமணியசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

தமிழகம் வரும் சிங்களர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இலங்கை அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்;

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதை பின்பற்றுவதில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும் சாமி கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மத்தியப் பிரதேச மாநிலம் வருவதற்கு மதிமுக தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ராஜபட்ச வருகையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து கருத்த கூறியுள்ள சாமி, மத்தியப் பிரதேசத்தில் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவரை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
Janata Party president Subramanian Swamy on Thursday demanded that the Centre issue a direction to Tamil Nadu government to “stop interfering” in the country’s policy on Sri Lanka and also ensure the safety of Sinhalas in the state. In a statement in New Delhi, he said President’s rule should be imposed in Tamil Nadu if the state government fails to follow the directions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X