For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவின் பைனலுக்கு முன்னேறியது லியாண்டர் பயஸ் ஜோடி

By
Leander Paes
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ராடெக் ஸ்டெபானெக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ராடெக் ஸ்டெபானெக் ஜோடி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்செல் கிரானோலர்ஸ், மார்க் லோபஸ் ஜோடியை எதிர்த்து ஆடியது.

இதில் ஸ்பெயின் நாட்டு ஜோடி முதல் செட்டில் 6-6 என்ற புள்ளியில் இருந்த போது, மார்க் லோபஸ் காயமடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

போட்டிக்கு பிறகு லியாண்டர் பயஸ் கூறியதாவது,

மார்க் லோபஸின் நிலையை எண்ணி நான் வருந்துகிறேன். நாங்கள் பார்வையாளர்களை சந்தேஷப்படுத்தும் வகையில் இங்கு வந்து விளையாடினோம். ஸ்பெயின் நாட்டு ஜோடியில் சிறந்த வீரர்கள் இருந்தனர். இன்று என்னுடன் ஆட சிறந்த ஜோடி கிடைத்தது. போட்டியில் அவர் எனக்கு பக்கபலமாக செயல்பட்டு, இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். அடுத்தப்படியாக இறுதிப்போட்டியில் விளையாட காத்திருக்கிறோம் என்றார்.

Story first published: Friday, September 7, 2012, 10:01 [IST]
Other articles published on Sep 7, 2012
English summary
India's Leander Paes and his Czech partner Radek Stepanek entered the men's doubles final of the US Open.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X