For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளவரசர் ஹாரிக்கு இருபது நிமிஷம் 'கிஸ்' கொடுத்த பெண் செக் மோசடி வழக்கில் கைது!

Google Oneindia Tamil News

Carrie Lynn Reichert
கலிபோர்னியா: இளவரசர் ஹாரி லாஸ் வேகாஸில் முகாமிட்டு, ஹோட்டலில் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்தபோது, அவருக்கு தான் 20 நிமிடம் வரை முத்தம் கொடுத்ததாக கூறி சலசலப்பை ஏற்படுத்திய கேரி ரிச்சர்ட், போலி செக் வழக்கில் கைதாகியுள்ளார்.

2003ம் ஆண்டு 22,000 டாலர் பணத்திற்கு செல்லாத செக்கைக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெக்ஸிகோவுக்கு அவர் விமானம் ஏறச் சென்றபோது அவரைப் போலீஸார் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் இளவரசர் ஹாரி விடுமுறைக்காக முகாமிட்டிருந்தபோது அவருக்கு தான் நிர்வாண கோலத்தில் 20 நிமிடம் தொடர்ந்து இடைவிடாமல் முத்தம் கொடுத்ததாக கேரி ரிச்சர்ட் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

40 வயதாகும் கேரி, சாண்டியாகோவைச் சேர்ந்தவர். இவர் மீது அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணம், ஹாரிசன் நகர கோர்ட்டில் செக் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

அவர் அமெரிக்காவை விட்டு மெக்ஸிகோவுக்குச் செல்லவுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

ஹாரியை முத்தமிட்டது குறித்து கேரி கூறுகையில், இளவரசர் ஹாரி ஒரு ஜென்டில்மேன். அவரும் நிர்வாணத்தில்தான் இருந்தார். நானும் அப்படித்தான் இருந்தார். இந்தக் கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும். ஆனால் ஹாரி அப்படிச் செய்யவில்லை. ஒரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு வேஸ்ட் என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது கலிபோர்னியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கேரி.

English summary
The alleged party pal of Prince Harry - who claimed they had a 'naked drunken fumble' in Las Vegas - has been arrested for writing bad checks as she tried to board a plane to Mexico. Carrie Lynn Reichert, 40, from San Diego, has been wanted in Harrison County, Mississippi, for writing checks totaling $21,672 starting in August 2003, according to the New York Daily News.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X