For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பாரா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி?

Google Oneindia Tamil News

Karunanidhi and Pranabh mukherjee
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் விழா மாலை 6.15 மணி வரை நடக்கிறது.

இந்த விழாவில் மாலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் இருந்து வரும் பிரணாப் ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கின்றார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என்று கூறப்படுகின்றது.

இதற்கு முதலில் ஜனாபதிபதி தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், பின்பு டி.ஆர்.பாலு, மு.க. ஸ்டாலின் ஆகியோர் தொடர் முயற்சி காரணமாக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் தற்போது நிலக்கரி சுரங்க ஊழல் புகாரில் திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெயர் அடிபடுவதால், அக்கட்சி தலைவர் ஒருவர் ஜனாதிபதியை சந்தித்தால் மேலும் சர்ச்சை ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

English summary
Pranabh Mukherjee is coming to Chennai today to attend the Chennai high court's 150th anniversary celebration. It is told that he may meet DMK chief Karunanidhi.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X