For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13 விழுக்காடு வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் இழந்த ரிலையன்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Reliance
டெல்லி: இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.20 விழுக்காடு சரிவை சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணம் ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் பல்லாயிரம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதுதானாம்

ஜூன் மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.06 கோடியாக இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் இது 91.35 கோடியாக குறைந்து போனது. இவ்வளவு இணைப்புகள் கொடுக்கப்பட்டாலும் தொடர் பயன்பாட்டில் இருப்பது என்னவோ 76 விழுக்காடு மட்டும்தான்!

இந்தியாதான் செல்போன் பயன்பாட்டு சந்தையில் 2-வது இடம். இதில் 95 விழுக்காட்டினர் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பார்தி ஏர்டெல் நிறுவனம்தான் வாடிக்கையாளர் மற்றும் வருவாய் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது ஜூலை மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர். மொத்தம் 18.8 கோடி இணைப்புகளை ஏர்டெல் வழங்கியிருக்கிறது.

வோடஃபோன் கடந்த ஜூலையில் கொடுத்த புதிய இணைப்புகள் எண்ணிக்கை 12 லட்சம். இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.49 கோடி

ஐடியா செல்லுலார் நிறுவனம் 4.50 லட்சம் இணைப்புகளையும், ஏர்செல் நிறுவனம் 2.80 லட்சம் இணைப்புகளையும் வழங்கியுள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். 4.70 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது.

செல்போன் மற்றும் லேண்டுலைன் தொலைபேசி இணைப்புகள் ஜுலை மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 2.07 லட்சம் சரிவடைந்து 94.48 கோடியாக குறைந்துள்ளது. இது, ஜுன் மாதத்தில் 96.55 கோடிக்கும் அதிகமான அளவில் இருந்தது.

ஏன் குறைந்தது?

இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்வெனில் ரிலையன்ஸ் மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் பல வாடிக்கையாளர்களை இழந்ததே காரணமாகும். ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 13 விழுக்காடு சரிவடைந்து 13.41 கோடியாக குறைந்துள்ளது. இது, ஜுன் மாதத்தில் 15.46 கோடியாக இருந்தது. இதனால் இரண்டாவது இடத்திலிருந்து இறங்கி மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டது.

டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் 24 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இப்போது இந்நிறுவனம் வழங்கியுள்ள செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 7.78 கோடியாக உள்ளது. செல்போன் சேவை துறையில் இந்நிறுவனம் ஆறாவது இடத்தில் உள்ளது. யூனிநார் நிறுவனம் ஜுலையில் 11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

English summary
India's Reliance Communications lost more than 13 percent of its mobile customers in July as it cut off inactive subscribers who have not used their phones for two months, although the firm said the move would have no impact on revenue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X