For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவில் வந்த கோதுமை கேரளாவுக்குப் போன விசித்திரம்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 3000 டன் கோதுமை குடோன் இடம் இல்லாததால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு சரக்கு ரயிலில் கடந்த 2ந் தேதி இரவு 3120 டன் கோதுமை கொண்டு வரப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளவிலை, ஆரல்வாய்மொழி, கோணம், உடையார்விளை குடோன்களில் இடம் இல்லாததால் கோதுமையை இறக்க முடியவில்லை. இதனால் 4 நாட்களாக சரக்கு ரயில் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு வேகனிற்கு ரூ.300 வீதம் அபராதம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்ட குடோன்களிலும் இடம் இல்லாததால் கோதுமையை கேரள மாநிலம் அங்காடிபுரத்தில் உள்ள குடோன்களுக்கும், கொட்டிபுரத்தில் உள்ள குடோன்களுக்கும் கோதுமை பிரித்து அனுப்பபட்டன.

English summary
3000 tons of wheat from Punjab sent to Kerala due to the lack of .godown facility at Kanyakuamri district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X