For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் ஜெயலலிதா-மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தி கார்ட்டூன், பேனர் வைத்த சிங்களர்கள்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக முதல்வரையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் படு அநாகரீகமாகவும், மகா கேவலப்படுத்தியும் சிங்கள இனவெறியர்கள் இலங்கையின் பல பகுதிகளில் பேனர் மற்றும் கார்ட்டூன்களை வைத்துள்ள செயல் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார். இந்த செயல் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஆர்வலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, முதல்வருக்கு தனி மரியாதையை பெற்றுத் தந்தது.

இதனால் அவர் மீது கோபம் கொண்டுள்ள சிங்கள இனவெறியர்கள் இலங்கையில் உள்ள சில பகுதிகளில் ஜெயலலிதாவை பலவிதமாக மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். குறிப்பாக ஒரு சிங்கள பத்திரிக்கையில் ஹசந்தா விஜெநாயகே என்ற நபர் முதல்வர்-பிரதமரை வைத்து வரைந்துள்ள மகா மட்டமான ஒரு கார்ட்டூனை போஸ்டர்களாக அடித்து ஒட்டியுள்ளனர்.

தமிழக முதல்வரையே இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் இந்த வெறியர்கள் கைகளில் சிக்கிய தமிழ் இன பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என சற்று நினைத்து பார்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது.

ஜெயலலிதாவுக்கு எதிராக இதுபோன்று மிகவும் கீழ்த்தரமான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற பெயரில் சிங்களவர்களும், தமிழின துரோகிகளான டக்ளஸ் மற்றும் கருணாவின் ஆட்கள் தான் என கூறப்படுகின்றது.

ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை உடனே இலங்கை அரசு கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Miscreants have kept slanderous images of CM Jayalalithaa in some parts of Sri Lanka. This makes the tamils boiling with fury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X