For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மட்டக்களப்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இதுவரை கருணா மற்றும் பிள்ளையான் ஆதிக்கம் இருந்து வந்தது. தற்போது இது முடிவுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு) 11 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 இடங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 இடங்களும்கிடைத்தன.

மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 14 இடங்கள்தான் கிடைத்தன. இந்த கட்சி சார்பில்தான் கருணாவின் சகோதரி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிள்ளையானும் போட்டியிட்டார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் ஆகியவை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை பகல் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்கவும் தாங்கள் தயார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

English summary
The Tamil National Alliance (TNA) which secured the second highest number of seats at the Eastern Provincial Council yesterday said it would stake a claim to form the council with the support of the Sri Lanka Muslim Congress (SLMC) and the United National Party (UNP).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X