For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான நிலையத்தில் ஜட்டிக்குள் வைத்து தேவாங்கு கடத்திய நபர்கள் கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Loris
டெல்லி: அரியவகை விலங்கான தேவாங்கு குட்டிகளை ஜட்டிக்குள் மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு சட்ட விரோதமாக கடத்தி செல்ல முயன்ற மூன்று நபர்களை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

துபாயில் இருந்து பாங்காங் செல்லும் விமானத்தில் பயணம் செய்த மூன்று நபர்கள் 7 இன்ச் நீளமுள்ள இரண்டு தேவாங்கு குட்டிகளை ஒரு பாலீதின் கவரில் பேக் செய்து தங்களில் அண்டர்வேர் பாக்கெட்டில் வைத்திருந்தனர்.

டெல்லியில் அந்த விமானம் தரை இறங்கியபோது குறிப்பிட்ட நபர்களை சோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தேவாங்கு குட்டிகளை கைப்பற்றி கடத்திச் சென்ற நபர்களை கைது செய்தனர். இதனையடுத்து விலங்குகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக தேவாங்கு குட்டிகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.

தேவாங்கு குட்டிகளை கடத்திய குற்றத்திற்காக கடத்திய நபர்களை கைது செய்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா நாடுகளில் தேவாங்கு குட்டிகள் அதிகம் வசிக்கின்றன. இந்தியா, ஸ்ரீ லங்காவில் உள்ள தேவாங்குகள் அரிதானவை. இந்தோனேசியா தேவாங்குகளுக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால் அவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. மேலும் இந்த விலங்குகள் பற்களுக்காகவும், தோலுக்காகவும் தற்போது கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

English summary
Three men have been arrested in Delhi for trying to board a flight with small primates hidden in their underwear. Two of the men were found with slender lorises concealed in pouches in their briefs, a customs official at Indira Gandhi International Airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X