For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாபிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகலை அளித்த டி.ஆர். பாலு: அடுத்து ஐ.நா. செல்கிறார்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அளித்துள்ளார்.

இது குறித்து டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின் பெயரில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 10ம் தேதி (நேற்று) சந்தித்து பேசினேன். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, டெசோசார்பில், ஆகஸ்டு 12ம் தேதி நடத்தப்பட்ட தமிழ் ஈழம் உரிமை பாதுகாப்பு மாநாடு விளைவுகள் பற்றி எடுத்துரைத்தேன்.

மேலும் நானும், மு.க.ஸ்டாலினும், அமெரிக்கா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை நியூயார்க்கில் சந்தித்து பேசுவது குறித்தும், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளில் கமிஷனரை சந்தித்து பேசும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் எடுத்துரைத்தேன். டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அவரிடம் வழங்கினேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Parliamentary Leader T R Baalu met President Pranab Mukherjee at New Delhi and presented copy of the resolutions adopted in the Tamil Eelam Supporters Organisation Conference organised by the party last month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X