For Daily Alerts
Just In
பிடிவாரண்ட்டை ரத்து செய்ய 'தேடப்படும் குற்றவாளி' டக்ளஸ் தேவானந்தா சென்னை கோர்ட்டில் மனு

1986-ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா, நவம்பர் 1-ந் தேதி சூளைமேட்டில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டக்ளஸ் தற்போது இலங்கையில் அமைச்சராக இருந்தும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.
இந்நிலையில் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரியும் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நாளைக்குள் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.