For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகை உறைய வைத்த... நெஞ்சை பதற வைத்த "செப்டம்பர்- 11" தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

World Trade Center
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்குவைதா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தியதியல் 3 ஆயிரம் பேர் உயிரிழந்த நாள்தான் "செப்டம்பர் 11". வரலாற்றில் 9/11 தாக்குதலாக இடம்பெற்றிருக்கும் இந்த நினைவுநாள் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி வாஷிங்டன்னில் இருந்து புறப்பட்ட இரண்டு பயணிகள் விமானத்தை கடத்திய அல்குவைதா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர்.

மேலும் மற்றொரு பயணிகள் விமானத்தைக் கொண்டு பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினர். 4வது விமானத்தைக் கடத்தி பென்சில்வேனியா மீது தாக்கினர். இந்த தாக்குதல்கள் சுமார் ஒன்றரை மணி நேர இடைவெளியில் நடந்தது. இதில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இரட்டைக் கோபுரங்களும் மண்ணோடு மண்ணாக மனிதர்களோடு மனிதர்களாக சாம்பலாகிப் போனது.

இந்த கொடூர தாக்குதலின் நினைவுநாள் இரட்டைக் கோபுரம் இருந்த இடம் உள்ளிட்ட அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பனெட்டா, இந்த நினைவுநாளில் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப் படையினரை அனைவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என்றார்.

English summary
US defense secretary Leon Panetta warned Americans not to forget the troops who are fighting and dying in Afghanistan, as he paid tribute to the victims of the 9/11 attacks on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X