For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்துத் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், யுரேனியம் நிரப்ப அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபெமடுத்தது. கடந்த திங்கள்கிழமையன்று கடற்கரையில் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதையடுத்து இன்று கடல் நீரில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யுரேனியம் எரிபொருள் நிரப்பி மின்சாரம் உற்பத்தி செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , யுரேனியம் நிரப்ப இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் வரும் 20-ந் தேதி யன்று மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.

English summary
Supreme Court has refused to stop fuel loading at Kudankulam nuclear plant. This is a massive setback for protestors who are currently embarking on a ‘Jal Satyagraha’, standing in the sea and refusing to stop protesting until the nuclear power project is called off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X