For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்துணவு இல்லாமல் குழந்தைகள் இறப்பது இந்தியாவில் தான் அதிகம்!: யூனிசெப்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Child Mortality Rate
உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.

2012 ம் ஆண்டிற்காக Child Mortality Estimates அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. உலகிலேயே 5 நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அவை இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகியனவாகும். மற்ற நான்கு நாடுகளை விடவும் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

15.55 லட்சம் குழந்தைகள் மரணம்

2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும், சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுத்தும் காரணிகளாக ஐந்தினை யுனிசெப் பட்டியலிட்டுள்ளது. குறைப்பிரசவத்தினால் 14 சதவிகிதம் பேறும், டயாரியாவினால் 11 சதவிகிதம் பேரும், மலேரியாவினால் 7 சதவிகிதம் பேரும் எதிர்பாராத நோய்களினால் 9 சதவிகிதம் குழந்தைகளும் உயிரிழக்கின்றனர்.

பசி என்பது ஒரு பிணி. ஒரு வாய் சோற்றுக்கே வக்கற்றவர்கள் அதிகம் இருப்பது இந்த தேசத்தில்தான் பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாழ்வதும் இங்குதான். பசிக்காக கையேந்துவதுதான் உலகிலேயே அவமானகரமான செயல். அந்த நிலையிலும் உணவு கிடைக்காமல் செத்து மடியும் பிஞ்சுகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

பல லட்சம் கோடி ரூபாய்களும், செல்வ வளமும் உள்ள நாட்டில்தான் போதிய சத்துணவும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல லட்சக் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் வெளியாகிறது. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாகும்.

இந்தியாவில் குழந்தைகள் மரணிப்பதை தடுக்கவேண்டுமெனில் நாட்டின் உணவுக்கிடங்குகளில் அபரிமிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை சீராக விநியோகித்தாலே போதும் எந்த குழந்தையும் பட்டினியால் மரணிக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
With almost 19,000 children under five years of age dying every day across the world, India tops the list of countries with the highest number of 15.55 lakh such deaths in 2011, according to a UN agency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X