For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்சுரன்ஸ் பணத்திற்காக 10வது கணவரை சுட்டுக் கொன்று, எரித்த அமெரிக்க பெண்

By Siva
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: டெக்சாஸில் ரூ.9,699,364 இன்சுரன்ஸ் பணத்திற்கு ஆசைபட்டு தனது பத்தாவது கணவரை சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டெக்சாஸைச் சேர்ந்தவர் ஷேரன் மேக்ஸ்வெல்(44). அவரது மகன் ஜேம்ஸ்(19). 9 பேரை விவாகரத்து செய்த ஷேரன் கோர்டன் மேக்ஸ்வெல்(46) என்பவரை அண்மையில் திருமணம் செய்தார். திருமணமாகி 5 மாதங்கள் கூட முடியாத நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோர்டன் படுகொலை செய்யப்பட்டார். ஷேரன் தனது கணவர் பெயரில் உள்ள ரூ.9,699,364 இன்சுரன்ஸ் பணத்திற்கு ஆசைபட்டு அவரது தலையில் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பிறகு அவரது உடலை டிரக்கில் வைத்து எரித்துவிட்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் கூறுகையில், 9 முறை விவாகரத்தான ஷேரன் தனது கணவர் பெயரில் இருந்த ரூ.9,699,364 இன்சுரன்ஸ் பணத்திற்கு ஆசைபட்டு அவரைக் கொன்றுவிட்டார். ஷேரனுக்கும் வேறு ஒருவருக்கும் இடையே உறவு இருப்பதை கண்டுபிடித்த கோர்டன் தனது மனைவியைவிட்டு பிரிய திட்டமிட்டார் என்றனர்.

கோர்டன் தனது மனைவி 357' துப்பாக்கியை பயன்படுத்துவிதில் வல்லவர் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார்.

முன்னதாக விசாரணையில் ஷேரன் கூறுகையில், தனது மகன் தான் கோர்டனைக் கொன்றான் என்றும், எதேச்சையாக துப்பாக்கி வெடித்ததில் அவர் இறந்ததார் என்றும், டிரக் தீப்பிடித்ததில் இறந்தார் என்றும் 3 கதைகளைக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷேரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.553,747.25 அபராதமும் விதித்துடன் வரும் 2042 வரை அவருக்கு பரோல் கொடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

English summary
A Texas woman got life term for murdering her 10th husband to collect his insurance money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X