For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட் மிடில்டனின் நிர்வாண படங்கள்.. 'ஸ்பெஷல் எடிஷன்' வெளியிடும் இத்தாலி பத்திரிக்கை!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் நிர்வாணப் படங்களை சில பத்திரிக்கைகள் லேசு பாசாக போட்ட நிலையில் தற்போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை, மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களுடன் கூடிய சிறப்புப் பதிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த பத்திரிக்கைகள் மிடில்டனின் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இத்தாலியின் சி என்ற இதழ், மிடில்டனின் 50 நிர்வாணப் படங்களை தனியாக ஒரு பதிப்பாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 26 பக்கங்களைக் கொண்டதாக இந்த சிறப்புப் பதிப்பு இருக்குமாம்.

இதற்கு முன்னோட்டமாக தனது லேட்டஸ்ட் இதழின் அட்டையில் மிடில்டனின் நிர்வாணப் படத்தை சி வெளியிட்டுள்ளது. இத்தாலிப் பத்திரிக்கையின் இந்த செயலால் இளவரசர் வில்லியம் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளார். இந்தப் படங்களை வெளியிடுவோர், எடுத்தோரை சிறையில் தள்ள வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற படங்கள் மேலும் வெளியாகாமல் தடுக்க வில்லியமின் வக்கீல்கள் பாரீஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரவுள்ளனர்.

ஆனால் வில்லியமின் இந்த எதிர்ப்புக்கு சி பத்திரிக்கை ஆசிரியர் அதிருப்தி தெரிவித்துள்ளார். எத்தகைய மிரட்டல் வந்தாலும் நாங்கள் எங்களது திட்டத்தைக் கைவிடப் போவதில்லை. இங்கிலாந்து ராணியே போன் செய்து பேசினாலும் கூட படம் வெளியிடப்படுவதை நிறுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் வில்லியம் தனது மனைவி மிடில்டனுடன் சாலமன் தீவுகளுக்கு சுற்றுலாவாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். பின்னர் படகு போல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வில்லியமையும், மிடில்டனையும் அழைத்துச் சென்றனர்.

இதில் காமெடி என்னவென்றால் சி பத்திரிக்கையின் ஓனர் வேறு யாருமல்ல, இத்தாலியில் செக்ஸ் லீலைகளை தாறுமாறாக புரிந்து அதனால் பதவியை இழந்து ஓடிய சில்வியோ பெர்லுஸ்கோனிதான்.

English summary
An Italian magazine owned by Silvio Berlusconi will today publish 50 photos of the Duchess of Cambridge topless – defying Palace pleas for restraint. Unapologetic editor Alfonso Signorini said ‘not even a direct call from the Queen’ would stop him printing the pictures in a special 26-page edition of Chi magazine under the headline ‘la Regina è nuda’ – the Queen naked. Royal aides are desperately trying to establish if an 11th-hour injunction can be sought against publication of the photographs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X