For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி ஆணைய கூட்டம்: மத்திய அமைச்சர் கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஷெட்டர் ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இப்படியெல்லாம் கூட நடந்துவிடுமா? நடந்தா சரித்திரம்தான்!

English summary
Karnataka Chief Minister Jagadish Shettar today called on External Affairs Minister S M Krishna and held talks on the Cauvery River Authority meeting at Delhi tomorrow, sources said. Shettar was accompanied by water Resources Minister Basavaraj Bommai, theysaid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X