For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்கு வருஷத்துக்கு 6 சிலிண்டர் போதுமா?... மமதா விளாசல்

Google Oneindia Tamil News

mamata banerjee
டெல்லி: வருஷத்துக்கு 6 சிலிண்டர்கள் வீடுகளுக்குப் போதும் என்று எப்படி காங்கிரஸ் கட்சி நினைத்தது?. இந்த நாட்டில் வசிக்கும் ஏழைகள் பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லை, அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். இதெல்லாம் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியுமா? என்று திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மமதா பானர்ஜி கூறுகையில் மீடியாக்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது. என்னை பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பு கொண்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக மீடியாக்கள் மூலமாக அறிந்தேன். அது தவறு. பிரதமரோ அல்லது வேறுயாருமோ என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு முடிவை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும். அதில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது என்பது அபத்தமானது. வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்குப் போதுமா...இந்த நாட்டில் உள்ள ஏழைகள் சாப்பிடுவதே கிடையாது, அவர்கள் பட்டினியில்தான் வாடி வருகின்றனர்.. காங்கிரஸ் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்றார் கோபமாக.

எதிர்க்கட்சிகள் நாளை அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டத்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு எனக்கு பந்த் அரசியலில் நம்பிக்கை இல்லை. அதனால் எந்த லாபமும் யாருக்கும் கிடைக்காது என்றார் மமதா.

English summary
Trinamool Congress leader Mamata Banerjee has requested the media to "stop spreading rumours". Mamata further accused the Congress of distorting facts and adds that Prime Minister Manmohan Singh never contacted her as claimed by Congress leaders. She further says that the government must withdraw FDI in retail and further slams the government for the cap on subsidised LPG cylinders. "Who says they (the poor) can survive on six cylinders? They are dieting, not eating," she says.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X