For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி: 4,000 கி.மீ. கடந்து இலக்கை தாக்கியது

Google Oneindia Tamil News

பாலசூர்: ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து கொண்டு 4 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க வல்ல நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-4 ஏவுகணைக்கான சோதனை நேற்று வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.

இந்தியா அக்னி வரிசை ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது. ஏற்கனவே அக்னி-1, அக்னி-2, அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வெற்றிகரமாக சோதித்து பார்த்து உள்ளது. இதில் அக்னி 4 ஏவுகணை நவீன தொழிற்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாகும்.

அக்னி-4 ஏவுகணை ஒரு டன் எடையுடைய அணு குண்டுகளை 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சுமந்து கொண்டு கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டவை. கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஒடிசாவில் உள்ள பாலசூர் கடற்கரையில் அக்னி-4 ஏவுகணைக்கான முதல் சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் அக்னி-4 ஏவுகணையை மீண்டும் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று காலை 11.45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் பாலசூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் நடைபெற்றது.

ஏவுதளம் தளம் 4ல் இருந்த மொபைல் லாஞ்சரில் இருந்து, அக்னி-4 விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் விஜய் குமார் சரஸ்வத், அக்னி திட்ட இயக்குனர் அவினாஷ் சந்தர் ஆகியோர் கண்காணித்தனர். ஏவுதல் பணியை அக்னி-4 திட்ட இயக்குனர் டெஸ்சி தாமஸ் வழிநடத்தினார்.

அக்னி-4 ஏவுகணைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை 20 நிமிடங்களில் சென்று தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அக்னி-4 ஏவுகணை சோதனையை வெற்றிக்கரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது,

அதிநவீன அக்னி-4 ஏவுகணை எடை குறைவானது. அதிகளவு நம்பகத்தன்மை அளிக்கத்தக்க விதத்தில் அதிநவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இலக்கை மிக துல்லியமாக சென்று தாக்கும் வகையில் ரிங் லேசர் கைரோஸ், மைக்ரோ நேவிகேஷன் சிஸ்டம் ஆகிய சாதனங்கள் அக்னி-4ல் பொருத்தப்பட்டுள்ளது.

வெப்ப தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 3 ஆயிரம் டிகிரி வரை வெப்பம் தாங்கும் தன்மை கொண்டது. அக்னி-4 ஏவுகணை 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. ஒரு டன் வரையுள்ள எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றார்.

English summary
In a quantum jump in its missile programme, India successfully test-fired a highly advanced nuclear-capable Agni-IV ballistic missile with a strike range of about 4,000 km from an island off Odisha coast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X