For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசா வழங்க புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துகிறது அமெரிக்க தூதரகம்

By Mathi
Google Oneindia Tamil News

US Visa
சென்னை: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பு, வேலை, சுற்றுலா ஆகிய காரணங்களுக்காக வருவோருக்கு அளிக்கப்படும் விசா நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூதரக பொது விவகாரத் துறை அதிகாரி டேவிட் கெய்னர், அமெரிக்க விசா பெறுவதற்கான புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடைமுறை வரும் 26ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்றார்.

மேலும் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். வேலை நாட்களில் தகவல்களை அறிந்து கொள்ள உதவி மையம் செயல்படுகிறது. இதில் தமிழ் உட்பட 6 மொழிகளில் தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
US Embassy announcing a new visa processing system for the travel document.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X