For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கருக்கு இடம் கேட்டு போராட்டம்: தலித் இயக்கம் முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் படம் இருப்பது போல, டாக்டர் அம்பேத்காரின் படத்தையும் அச்சிட கோரி, டெல்லியில் வரும் 24ம் தேதி தலித் விடுதலை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

Dr.Ambedkar image in the rupee notes: Dalits protests in Delhi
இந்திய ரூபாய் நோட்டுகளில் 1993க்கு முன்பு வரை அசோகர் தூண் இடம் பெற்றிருந்தது. அதன்பிறகு ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட ரிசர்வ் வங்கி தீர்மானித்தது.

அதன்படி இதை பரிந்துரையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, முதன் முதலில் ரூ.500 நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் இடம் பெற்றது. 1996ம் ஆண்டு முதல் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தி படம் இடம் பெற்று வருகிறது.

ரூபாய் நோட்டுக்கள் அனைத்திலும் மகாத்மா காந்தி படம் மட்டுமே அச்சிடப்படுவதற்கு பதிலாக ஒவ்வொரு மதிப்பிலான ரூபாய் நோட்டிலும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பிற தலைவர்களின் படங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டாக்டர் அம்பேத்கார் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. இதற்கான போராட்டத்தையும் அறிவித்துள்ளது. வரும் 24ம் தேதி டெல்லி சந்தர்மந்தர் பகுதியில் அதன் தேசிய அமைப்பாளர் தலித் பாண்டியன் தலைமையிலும், தேசிய பொதுச் செயலாளர் தலித் ஞானசேகரன் முன்னிலையிலும் தொடர் முழுக்கப் பேராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு சமூக அமைப்புகளும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால் இப்போராட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயர்களை பல்வேறு மாநில பொது மக்கள் சார்பில் பரிந்துரை செய்துள்ளதால் இவர்களின் படங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மத்திய வாரியம் ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Dalit freedom network has decided to conduct a protest in Delhi for promoting Dr.Ambedkar's image in the Indian rupee notes as Mahatma Gandhi's image.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X