For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை. தேர்வுத் தாள் முறைகேட்டுக்கு முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்தான் காரணம்: பேராசிரியர்

By Mathi
Google Oneindia Tamil News

Manner Jawahar
சென்னை: தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு செய்த வழக்கில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விசாரிக்கப்பட இருக்கிறார். அவரை விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பது பற்றி அரசு முடிவு செய்யும் என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்(பொறுப்பு) காளிராஜ் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலை கழகத்தில் 2009 முதல் 2012 வரையிலான கல்வி ஆண்டுகளில் தேர்வுகளில் தோல்வியடைந்த முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் சிலருக்கு மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. முன்னாள் பேராசிரியர்கள் கஸ்தூரி, ராமையன், முன்னாள் கூடுதல் தொழில் கல்வி இயக்குனர் எட்வின் சந்திரமோனி ஆகியோரை கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணையில் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகரின் உத்தரவினால்தான் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளாக இருந்த தாங்கள் முறைகேட்டில் ஈடுபட்டோம் என்று தமிழ்பொறை, சிவகுமார், மணிஆனந்த் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். இதனால் மூவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகரை விசாரிக்க உயர்நிலை குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
What made the probe into the Anna University semester exam marks scandal easy was the ready confessions of the three suspended faculty members. The scam would have never been probed, despite widespread knowledge about it for the past two years, but for written complaints from assistant professors Sivakoumar and Mani Anand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X