For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது,

உலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.

காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.

அடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
More than 100 million people will die and global economic growth will be cut by 3.2 percent of gross domestic product by 2030 if the world fails to tackle climate change, a report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X