For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்த வைகோ

By Siva
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயம் முன்பு இன்று ஆஜரானார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2 ஆண்டுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து வருவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இது குறித்து தீர்ப்பாயத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பாயமோ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து உத்தரவிட்டது.

இதையடுத்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நீதிபதி வி.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் இன்று சென்னையில் கூடுகிறது என்றும், விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை எம்.ஆர்.பி. நகரில் உள்ள இமேஜ் அரங்கில் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் கூடியது. வைகோ இந்த தீர்ப்பாயம் முன்பு காலையில் ஆஜராகி தனது ஆட்சேபத்தை தெரிவித்தார்.

English summary
MDMK chief Vaiko appeared before the tribunal and expressed his displeasure over the extension of ban on LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X