For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்

Google Oneindia Tamil News

Tiruchendur temple
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் செப்டம்பர் மாதம் மொத்தம் ரூ.73 லட்சத்து 31 ஆயிரத்து 107 வருமானம் கிடைத்துள்ளது.

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கோவிலில் மாதம் இருமுறை உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் கடந்த 18ம் தேதி முதல் முறை எண்ணப்பட்டது. அப்போது ரூ.45 லட்சத்தது 77 ஆயிரத்து 324 வசூலாகி இருந்தது. மேலும் 658 கிராம் தங்கமும், 2,610 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வந்திருந்தது.

இந்த மாதம் (செப்டம்பர்) 2வது முறையாக நேற்றுமுன்தினம் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு தக்கர் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.

இதில் ரூ.23 லட்சத்து 35ஆயிரத்து 866 கிடைத்தது. கோசாலை உண்டியலில் ரூ.13 ஆயிரத்து 715 கிடைத்தது. அன்னதான உண்டியலில் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 204, மேலக்கோயில் உண்டியலில் ரூ.2 ஆயிரத்து 560, பாளை கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 978 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 234 கிராம் தங்கமும், 2010 கிராம் வெள்ளியும் உண்டியலில் கிடந்தன.

இந்த மாதம் மட்டும் மொத்தம் ரூ.73 லட்சத்து 31 ஆயிரத்து 107, தங்கம் 892 கிராம், வெள்ளி 4,620 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

English summary
Tiruchendur temple has got Rs.73,31,107 money, 892 gram of gold and 4,620 gram silver as a income in this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X