For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் தூதரிடம் உதவி கேட்டு கடிதம் அனுப்பிய அஜ்மல்கசாப்

By Mathi
Google Oneindia Tamil News

Kasab
மும்பை: மும்பையில் 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய போது பிடிபட்ட அஜ்மல்கசாப் தமக்கு உதவி கோரி பாகிஸ்தான் தூதருக்கு கடிதங்களை அனுப்பியது தெரியவந்துள்ளது.

மும்பையில் தாக்குத நடத்தியதற்காக தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறான் அஜ்லம்கசாப். தற்போது மும்பை சிறையில் அடைக்கபப்ட்டிருக்கிறான். அவன் கைப்பட உருது மொழியில் உதவி கேட்டு பாகிஸ்தான் தூதருக்கு தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பியிருக்கிறான் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அஜ்மல்கசாப்பின் கடித விவரம்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பரித்கோட்டைச் சேர்ந்தவன் நான். எனது வீட்டு தொலைபேசி எண்: 03017363886. நான் ஒரு ஜிஹாதியாக விரும்பினேன். இதற்காக முசாபராபாத்தில் முரிட்கே என்ற இடத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு ஹபிஸ் சயீத், ஜாகிஜர் ரஹ்மான் லக்வி, அபு ஹம்ஸா மற்றும் கஹாபா ஆகியோர் பயிற்சி கொடுத்தனர். மேலும் மும்பையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் கப்பலான அல் ஹீசைனி மூலம் இந்திய கடல் பகுதிக்கு வந்தோம். பின்னர் எம்.வி.குபேர் என்ற இந்திய மீன்பிடி படகை துப்பாக்கி முனையில் கடத்தி அதன் மூலம் மும்பைக்கு வந்து தாக்குதல் நடத்தினோம். எனக்கு சட்ட உதவி கிடைக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்காக வாதாட ஒருவரை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் அஜ்மல் கசாப் எழுதியுள்ளான்.

ஆனால் இந்தக் கடிதங்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திடம் இருந்து எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.

English summary
Convicted 26/11 terrorist Ajmal Kasab desperately wanted to meet the Pakistani high commissioner in India after his arrest in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X