For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அச்சுதானந்தனுடன் உதயக்குமாரின் மனைவி மீரா திடீர் சந்திப்பு

Google Oneindia Tamil News

Meera
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தீவிர ஆதரவு தரும் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை, போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரின் மனைவி மீரா சந்தித்துப் பேசியுள்ளார். திருவனந்தபுரத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது.

கூடங்குளம் போராட்டத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தரவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மட்டும் இப்போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வருகின்றார்.

சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் கூடங்குளத்திற்குக் கிளம்பிய அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இந்த நிலையில் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரின் மனைவி மீரா திருவனந்தபுரம் சென்று அச்சுதானந்தனை நேரில் சந்தித்துப் பேசினார். நேற்று இரவு அச்சுதானந்தன் வீட்டுக்குப் போன மீரா அங்கு பத்து நிமிடங்கள் அவரை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின்போது கேரள மீனவர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கூடங்குளம் விவகாரம் குறித்தும், அதுதொடர்பாக கேரள மீனவர்களின் ஆதரவைப் பெறுவது குறித்தும் அப்போது பேசப்பட்டதாக தெரிகிறது.

English summary
Anti KKNPP agitation coordinator Udayakumar's wife Meera met Kerala former CM Achuthananthan to seek support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X