For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பான் கி மூனை ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து டெசோ தீர்மானத்தைக் கொடுப்பர்- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மான விவர அறிக்கையை அளிப்பார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், டெசோ கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குக் கருணாநிதி தலைமை தாங்கினார். டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

டெசோ மாநாட்டு தீர்மான கருத்துக்களை ஐ.நா. மன்றத்தின் செயலாளரையும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்பிடமும் கொடுக்க இருக்கிறோம். ஏற்கனவே அறிவித்தவாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, இருவரும் செல்வது குறித்து எடுத்துச் சொல்லி அதன் தொடர்பான விளக்கங்களை எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர்.

கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜெனிவாவில் மனித உரிமை செயலாளரை பார்ப்பதற்கும், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலாளரை பார்ப்பதற்கும் தேதி கிடைத்தவுடன் இருவரும் டெசோ தீர்மான நகல்களுடன் செல்ல இருக்கிறார்கள். அங்கிருந்து உறுதியான தேதி இதுவரை வரவில்லை.

இதுதொடர்பாக அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். உறுதியான தேதி கிடைத்தபிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

இலங்கை தமிழர்கள் நிலை இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. அந்த தகவல்களும் இந்த நகல்களுடன் இணைத்து அதுபற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல இருவரும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானங்கள் ஐ.நா.சபையிலும் இந்திய அரசின் ஆதரவுடன் ஏற்கப்பட வேண்டும்.

திமுக சார்பில் நடத்தப்படும் மனிதசங்கலிலி போராட்டத்துக்கு 3 பாதைகளை குறிப்பிட்டு கேட்டு உள்ளோம். அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. போலீசார் அனுமதி தருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் கருணாநிதி.

ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் டெசோ மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

English summary
DMK treasurer M.K. Stalin and T R Baalu will handover the TESO declarations to UN general secretary Ban Ki Moon soon, said DMK chief Karunanidhi after the TESO meeting in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X