For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் காரிலிருந்து மனைவியை நடுரோட்டில் தள்ளிய கணவர்: சென்னையில் பரபரப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சைக்கோ கணவர் ஒருவர் ஓடும் காரில் இருந்து மனைவியை நடுரோட்டில் தள்ளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூளைமேடு தெற்கு கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஏஞ்சலின் புனிதா (29) வியாழக்கிழமையன்று ராஜ்குமாரும், புனிதாவும் காரில் பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரைக்கு சென்றனர். பிறகு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டனர். பின்னர் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சைக்கோ கணவர்

ராஜ்குமார் சைக்கோ குணம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. திடீரென காருக்குள் கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் மனைவியை தாக்குவதற்காக காருக்குள் தயாராக வைத்திருந்த கல்லை எடுத்து ஏஞ்சலின் புனிதாவை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த புனிதா தப்ப முயன்றார். ஆனால் கார் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அவரால் தப்ப இயலவில்லை.

நடுரோட்டில் தள்ளினார்

கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்ததால், அவர் போட்ட கூச்சல் வெளியில் கேட்கவில்லை. ஓடும் காருக்குள் மனைவியை தாக்கியபடி வந்த ராஜ்குமார், தி.நகர் பாண்டி பஜார் பகுதியில் காரில் இருந்து புனிதாவை கீழே தள்ளி விட்டார். ஓடும் காரில் இருந்து கீழே விழுந்ததால் புனிதா பலத்த காயம் அடைந்தார். இதனை அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிட காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவர் இதுபற்றி கூறினார். அதற்கு போலீசார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும் அந்த காவலாளி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் வந்தவர்கள் புனிதாவை மீட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஓடும் காரில் இருந்து மனைவியை தள்ளிவிட்டது தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மனைவியை தள்ளிவிட்டுவிட்டு தலைமறைவாகி விட்ட ராஜ்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.

English summary
A Husband pushed his wife from running car in T Nagar, Chennai in a fist of anger. She was injured and admitted in hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X