For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துரை தயாநிதியின் மனைவி அனுஷாவுக்கு போலீஸ் சம்மன்-முன்னாள் துணை மேயரிடமும் விசாரணை!

By Chakra
Google Oneindia Tamil News

Durai Dayanidhi and Anusha
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் இருப்பிடம் தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதே போல துரை தயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீத்தாராமன் உள்பட 3 பேருக்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இன்று காலை மன்னனை மதுரை எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக அழகிரியின் மருமகன் வெங்கடேஷிடம் தனிப்படை போலீஸார் இரண்டு முறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷை கடந்த 2ம் தேதி மதுரைக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் துரை தயாநிதியின் சென்னை வீடு, திரைப்பட அலுவலத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வெங்கடேஷை மீண்டும் நேற்றும் மதுரைக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர். வக்கீல்களுடன் போலீஸ் விசாரணைக்கு வந்த வெங்கடேஷ் பல்வேறு ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்தார்.

இந் நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் அழகிரியின் 2வது மகள் அஞ்சுகச் செல்வியின் கணவர் விவேக்கையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் போயுள்ளது.

English summary
Madurai police has issued summons to Central minister Alagiri's daughter in law Anusha in connection with the granite scam in which case has been filed against her husband Durai Dayanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X