For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெனிசுலா அதிபராக ஹியூகோ சாவெஸ் மீண்டும் வெற்றி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரகாஸ்: வெனிசுலா நாட்டின் அதிபர் பதவியை ஹியூகோ சாவேஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நீதிக் கட்சியின் வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸ் ஐ விட10 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஞாயிறன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது . ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், 1.9 கோடி மக்கள் நேற்று ஓட்டளித்தனர். வெனிசுலா நாட்டின் அதிபராக, சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். சோஷலிஸ்ட் கட்சி சார்பில், சாவெஸ் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிட்டார். 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள சாவெசை எதிர்த்து, நீதிக் கட்சியின் சார்பில், ஹென்ரிக் கேப்ரில்ஸ் போட்டியிட்டார்.

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற சாவெஸ், இந்த காரணத்தால் மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார்.ஆனால், சாவெஸ் ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்து விட்டதாக, ஹென்ரிக் பிரசாரம் செய்தார். தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் மிகச்சிறந்த அதிபராக மக்கள் பணியாற்றுவேன் என்று ஹென்ரிக் கேப்ரில்ஸ் உணர்ச்சிகரமாக பிரச்சாரம் செய்தும் மக்களிடையே அது எடுபடாமல் போனது.

சாவேஸ் 70.4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனது வெற்றி குறித்து கூறியுள்ள சாவெஸ், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். சாவெஸ்க்கு 54.4 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரில்ஸ் 44.9 சதவிகித வாக்குகள் பெற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் அறுவைசிகிச்சை செய்து செய்து கொண்ட சாவெஸ், கீமோதெரபி ரேடியேசன் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மக்கள் பணியாற்றுவதற்காக அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதே மக்களிடம் அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது. இதுவே சாவெசுக்கு மீண்டும் 6 ஆண்டுகள் வெனிசுலாவை ஆளும் பொறுப்பை தந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
Fighting for his political life, President Hugo Chavez overcame a vigorous challenge by Henrique Capriles in Sunday’s presidential election, receiving another six-year term that will give the populist firebrand the opportunity to complete the consolidation of what he calls 21st century socialism in one of the world’s great oil powers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X