For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே மிகவும் வயதான பெண் 132 வயதில் மரணம்

Google Oneindia Tamil News

oldest person
லண்டன்: உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை படைத்த பெண், தனது 132வது வயதில் இறந்தார்.

ஜார்ஜியாவை சேர்ந்த பெண் ஆன்டிசா கிவிசாவா. இவர் ரஷ்யாவில் கடந்த 1880ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி பிறந்தார் என்று இவரது பாஸ்போர்ட் மூலம் தெரிகிறது. மற்றபடி இவரது உண்மையான வயதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இவர் சமீபத்தில் இறந்தார்.

இவர் இறப்பிற்கு முன், ஜார்ஜியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சாசினோ என்ற கிராமத்தில் தனது 42 வயது பேரனுடன் வசித்து வந்தார். இவர் தனது 85 வயது வரை தேயிலை பறிக்கும் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா பல துண்டுகளாக உடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டு போர்களில் இவரது உண்மையான பிறந்தநாளை நிரூபிக்கும் ஆதாரங்கள் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மூதாட்டியின் நண்பர்கள், ஊர்காரர்கள், பிள்ளைகள் ஆகியோர், அவருக்கு 132 வயதாகி உள்ளதாக உறுதியாக கூறுகின்றனர். இதன்மூலம் உலகில் வாழ்ந்த மிக வயதான பெண் என்ற பெருமையை ஆன்டிசா பெற்றார். மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.

ஆன்டிசா தனது வாழ்நாளில் 2 உலக போர்களையும், ரஷிய புரட்சியையும் சந்தித்துள்ளார். இவருக்கு 12 பேரக்குழந்தைகளும், 18 கொள்ளு பேரக்குழந்தைகளும், 4 எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். ஆன்டிசா தினமும் சிறிய அளவு உள்ளூர் மது அருந்தி வந்ததாகவும், அதுவே இவரது நீண்டநாள் வாழ்வுக்கு காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆன்டிசாவின் மரணத்தை தொடர்ந்து, தற்போது உலகின் நீண்டநாள் வாழ்ந்து வரும் பெண்ணாக, ஜார்ஜியாவை சேர்ந்த பெஸ்சி கூப்பர் என்பவர் கண்டறியப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 116 வயதாகிறது. கடந்த 1896ம் ஆண்டு இவர் பிறந்ததாக தெளிவான ஆதாரம் உள்ளது.

English summary
A Georgian woman Antisa Khvichava who claimed to be 132 years old making her the world's oldest human being ever has died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X