For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கற்பழிப்புகளைத் தடுக்க இளம் வயது திருமணமே தீர்வாம்.. சொல்கிறார் ஒரு மாஜி முதல்வர்!

By Chakra
Google Oneindia Tamil News

Haryana Rape
டெல்லி: பெண்கள் கற்பழிக்கப்படுவதைத் தவிர்க்க அவர்களுக்கு இளம் வயதிலேயே, அதாவது 15 வயதிலேயே, திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஹரியாணா முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் செளதாலா.

காங்கிரஸ் ஆளும் ஹரியானா மாநிலத்தில் கற்பழிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 30 நாட்களில் மட்டும் 15 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹிஸ்ஸார் மாவட்டத்தில் தப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலித் பெண் 13 பேர் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 8 பேர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தபோது அக்கும்பலைச் சேர்ந்த 4பேர் அதை செல்போனில் பதிவு செய்து வெளியே பரவச் செய்தனர்.

இதனையடுத்து குற்றவாளிகளின் மீது நடவடிக்கைக் கோரி அந்த இளம் பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து இந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு கிளம்பியதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு உத்தரவிட்டார்.

ஆனால், இந்தக் கற்பழிப்புக் கும்பல்களுக்கு ஆதரவாக ஹரியாணாவின் உயர் ஜாதியைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலான காப் கருத்துக் கூறி வருகிறது. ஹரியாணாவில் பெரும்பான்மையாக உள்ள ஜாட் இனத்தினரைக் கொண்ட இந்த காப் பஞ்சாயத்து தான் பெரும்பான்மையான கிராமங்களை கட்டுப்படுத்தி வருகிறது. இவர்கள் கூறுவதே சட்டமாக இருந்து வருகிறது.

இந் நிலையில் கற்பழிப்புகளைத் தடுக்க வேண்டுமானால் சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிட என்று காப் 'அறிவாளித்தனமாக' கூறியுள்ளது. இதையே எதிரொலித்துள்ளார் முன்னாள் முதல்வரும் அகில இந்திய லோக் தள் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா.

அவர் கூறுகையில், முகலாயர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அந்தக் காலத்தில் முகலாயர்களின் அத்துமீறல்களில் இருந்து காப்பாற்ற தங்களது பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். இப்போதும் அதே போன்ற சூழல் தான் உருவாகி வருகிறது. இதனால் தான் இளம் வயது திருமணங்களை செய்ய வேண்டும் என்று காப் கூறுகிறது. அதை நான் ஆதரிக்கிறேன் என்றார் செளதாலா.

ஒரு மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் பேசும் பேச்சா இது!.

அதே நேரத்தில் சட்டம் என்பது காப் பஞ்சாயத்திடம் இல்லை என்று சோனியா கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Even as the nation stands worried about the growing incidences of rape in Haryana, the community as well as political leaders are coming up with shocking and bizarre explanations and solutions to tackle the problem. As against expectation that the political fraternity in the state will question the disturbing “solution” suggested by Rohtak Khap leaders that girls as young as 15-year-olds should be married off to control the situation, political leaders in the state are either keeping mum on the issue or more horrendously seen backing them. The Khap’s proposal has been backed by none other than the state’s former chief minister Om Prakash Chautala. Chautala was today reported by saying, "We should learn from the past... especially in Mughal era, people used to marry their girls to save them from Mughal atrocities and currently a similar situation is arising in the state. I think that's the reason khap has taken such a decision and I support it."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X