For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அற்ப காரணங்களுக்கான பயன்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம்: மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அற்பமான காரணங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தனி நபர் சுதந்திரம் பாதித்துவிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஆணையர்களின் 7ஆவது மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைக்கும், தனி நபர் உரிமைக்கும் இடையே ஒரு சமமான தன்மை பேணப்பட வேண்டும். இதனால், தனி நபர் சுதந்திரமும், அடிப்படை உரிமையும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஆனால், தனி நபரின் உள்விவகாரங்கள் பாதிக்காத வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் வகையில் வரையறையை உருவாக்குவது சிக்கலான ஒன்று. பொது நலனுக்குச் சிறிதும் பயன்படாத வகையில், அற்பமான காரணங்களுக்காகவும், எரிச்சலூட்டக்கூடிய வகையிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இச்சட்டம் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுமாயின் அதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் கோரப்படும் தகவல்கள், அரசு அதிகாரிகளின் நேரத்தை வீணடிக்கின்றன. அந்த நேரத்தில் மக்களுக்காக ஆற்றும் பணிகள் குறைந்து விடுகிறது.அதிக தகவல்களைக் கோரும் மனுக்கள் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றன. அவற்றில் ஏற்படும் தவறுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன என்றார் அவர்.

English summary
Raising concern about the possible infringement of personal privacy while providing information under the Right to Information Act, prime minister Manmohan Singh said a fine balance should be maintained between the Right to Information and the Right to Privacy, which stems out of the Fundamental Right to Life and Liberty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X