For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

36 கி.மீ. உயரத்திலிருந்து குதித்து ஒலியை விட வேகமாக பறந்த மனிதர்!

By Chakra
Google Oneindia Tamil News

ரோஸ்வெல்: வானில் 36 கி.மீ. உயரத்தில் இருந்து தரையில் குதித்து, ஒலியை விட வேகமாக பயணித்து, தரையை பத்திரமாக வந்து அடைந்துள்ளார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் பவும்கார்ட்னர் (வயது 43) என்ற ஸ்கை டைவர்.

ஹீலியம் பலூன்:

ஹீலியம் பலூன்:

இது தான் இதுவரை மிக அதிகமான உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாகும். நேற்று முன் தினம் ஹீலியம் நிரப்பப்பட்ட 55 மாடி உயரம் கொண்ட ஹாட் ஏர் பலூன் உதவியுடன் இயங்கிய ஒரு விண்கலத்தில் ஏறி 1,28,100 அடி உயரத்தை அடைந்தார்.

ஓசோன் படலம்...

ஓசோன் படலம்...

பூமியில் இருந்து 6 கிலோ மீட்டருக்கு மேல் 10 கி.மீ. வரை இருப்பது Troposhere. 10வது கிலோ மீட்டரில் இருந்து 50 கி.மீ. வரை இருப்பது stratosphere (வளி மண்டலம்). இதில் 20வது கிலோ மீட்டரில் தான் ஓசோன் படலம் உள்ளது.

36 கி.மீ. உயரத்தை அடைந்தவுடன்...

36 கி.மீ. உயரத்தை அடைந்தவுடன்...

விமானங்கள் பறப்பது 10 முதல் 20 கி.மீ. உயரத்தில் தான். ஹாட் ஏர் பலூன்கள் தான் 40 கி.மீ. வரை செல்லும்.

இந்த உயரத்தில் ஆக்சிஜன் கிடையாது. வெப்ப நிலை மைனர் 70 டிகிரி. சுவாசிக்க முடியாது. பாதுகாப்பான ஸ்பெஸ் சூட் அணியாவிட்டால் உடலில் உள்ள திரவம் எல்லாம், கொப்புளமாக வெடிக்க ஆரம்பித்துவிடும்.

வேகம் 833.9 மைல்கள்....

வேகம் 833.9 மைல்கள்....

இதனால் செயற்கை ஆக்சிஸன் உதவியோடு ஹாட் ஏர் பலூனில் இருந்த விண்கலத்தில் பயணித்த பெலிக்ஸ் 36 கி.மீ. உயரத்தை அடைந்தவுடன் அங்கிருந்து குதித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் இவர் அடைந்த வேகம் 833.9 மைல்கள். அதாவது மணிக்கு 1,200 கி.மீ. வேகம். இந்த வேகத்தில் தரையை நோக்கி பாயத் தொடங்கினார் பெலிக்ஸ். ஒரு கட்டத்தில் ஒலியின் வேகத்தைக் கடந்து supersonic வேகத்தில் வந்தார்.

பாலைவனத்தில் பத்திரமாக...

பாலைவனத்தில் பத்திரமாக...

4 நிமிடங்கள் 20 நொடி வரை அதாவது, 119,846 அடி வரை பாராசூட்டை திறக்காமல் அப்படியே தரையை நோக்கி free fall ஆக பாய்ந்து கொண்டிருந்தார் பெலிக்ஸ். இதன் பின்னர் தனது பாராசூட்டை திறந்து கொண்டு, வேகத்தைக் குறைத்துக் கொண்டு அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பாலைவனத்தில் பத்திரமாக தரை இறங்கினார்.

36 கி.மீ. தூரத்தை இவர் கடந்தது மொத்தமே 9 நிமிடங்களில்!

''நாம் எவ்வளவு சிறிய ஜீவிகள்'':

''நாம் எவ்வளவு சிறிய ஜீவிகள்'':

அங்கிருந்து பூமியை பார்த்தது எப்படி இருந்தது என்று கேட்டால், ''நாம் எவ்வளவு சிறிய ஜீவிகள் என்பதை உணர சில நேரங்களில் இவ்வளவு உயரத்துக்கு போக வேண்டியிருக்கிறது'' என்று பதில் தந்தார் பெலிக்ஸ்.

இதே நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்...

இதே நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்...

முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்தது அமெரிக்க விமானியான சக் யேகர். போர் விமானத்தில் அவர் இந்த சாதனையைச் செய்தார், சரியாக இதே நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு!.

English summary
In a giant leap from more than 24 miles up, a daredevil skydiver shattered the sound barrier on Sunday while making the highest jump ever – a tumbling, death-defying plunge from a balloon to a safe landing in the New Mexico desert. Felix Baumgartner hit Mach 1.24, or 833.9 mph, according to preliminary data, and became the first person to reach supersonic speed without traveling in a jet or a spacecraft after hopping out of a capsule that had reached an altitude of 128,100 feet above the Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X