For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துரை தயாநிதி ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்று தெரியவில்லை: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில் தனது பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி தலைமறைவாக இருப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி,

கேள்வி: துரை தயாநிதிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதே?

பதில்: வழக்கறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சட்டப்படி செயல்படுவார்கள்.

கேள்வி: கிரானைட் பிரச்சனையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கேட்டிருந்தீர்களே?

பதில்: ஆமாம். ஏற்கெனவே இருந்த ஆட்சியில் யார் யாருக்கு கிரானைட் கல் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பதையும் சேர்த்து சிபிஐ மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

ஆனால் இந்த ஆட்சியினர் சகட்டுமேனிக்கு எல்லோர் மீதும் வழக்கு போட்டு உடனடியாக அவர்களைக் கைது செய்ய எண்ணுகின்றனர்.

திமுகவின் முக்கிய நிர்வாகிகளைப் பயமுறுத்திவிட்டால், வரவிருக்கும் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என முதல்வர் ஜெயலலிதா எண்ணுகிறார். அது எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.

கேள்வி: வழக்கில் தேடப்படுவர்கள் தலைமறைவாக இருப்பது சரியா?

பதில்: தலைமறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை முறைப்படி நீதிமன்றத்தின் மூலம் அணுகுவார்கள் என்றார்.

English summary
Former Tamil Nadu chief minister and DMK supremo M Karunanidhi said he had no idea why his grandson, Durai Dayanidhi, was hiding, adding that the government and the judiciary could proceed legally. Durai, the son of Karunanidhi's son and DMK MP Alagiri, is wanted in an illegal granite mining case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X