For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சர் நெப்போலியன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்: கேஜ்ரிவால் குழுவினர் கைது

Google Oneindia Tamil News

Napolean
சென்னை: சென்னையில் மத்திய அமைச்சர் நெப்போலியன் வீட்டு முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்திய கேஜ்ரிவால் குழுவைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி தலைமையிலான அறக்கட்டளை, தவறான தகவல்களை கூறி மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்திடம் இருந்து பல லட்சம் ரூபாய் மானியம் பெற்றது. இதை கண்டித்து டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் ஜெகதாம்பாள் காலனியில் உள்ள மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன் வீடு முன்பு சமூக ஆர்வலர் கேஜ்ரிவால் தலைமையிலான இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக இந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் ஆர்பாட்டத்தினால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Arvind Kejriwal's supporters 22 person were arrested after protesting in front of central minister Napolean's house in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X