For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் ராஜினாமா

By Chakra
Google Oneindia Tamil News

Vikram Pandit
வாஷிங்டன்: சிட்டி பேங்க் குழுமத்தில் இருந்து அதன் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட் விலகியுள்ளார்.

இவரது விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாக சிட்டி குரூப் குழுமத்தின் தலைவரான மைக்கேல் ஓ நீல் தெரிவித்துள்ளார். பண்டிட்டுக்குப் பதிலாக சிட்டி குரூப்பின் முன்னாள் ஐரோப்பா, வளைகுடா, ஆப்பிரிக்க பிரிவின் தலைவரான மைக்கேல் கோர்பட், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பண்டிட்டுடன் சேர்ந்து அவருடன் நீண்டகாலமாக பணியாற்றிய சி.ஓ.ஓ, ஜான் ஹேவன்சும் ராஜினாமா செய்துள்ளார்.

சிட்டி வங்கி கிட்டத்தட்ட திவால் நிலைக்குப் போன போது, அதன் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பண்டிட். கடும் நடவடிக்கைகளை எடுத்து அந்த வங்கியை காப்பாற்றி, நஷ்டத்தைக் குறைத்தார்.

ஆனால், மோர்கன் ஸ்டான்லி நிதி அமைப்பிடம் இருந்த சிட்டி வங்கியின் முதலீடுகளை, மிகக் குறைந்த விலைக்கு விற்றார். இதனால் ரூ. 25,000 கோடி வரை சிட்டி வங்கி நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Citigroup Inc Chief Executive Vikram Pandit has resigned, effective immediately, a shock change at the top of the bank just one day after surprisingly strong quarterly results. A statement on Tuesday from Chairman Michael O'Neill said Michael Corbat, previously chief executive for Europe, Middle East and Africa, would succeed Pandit as CEO and as a board member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X