For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடிவாரண்ட் வழக்கில் சென்னை கோர்ட்டின் நாளைய தீர்ப்பு எப்படி இருக்கும்? கலங்கிக் கிடக்கும் டக்ளஸ்

By Mathi
Google Oneindia Tamil News

Douglas Devananda
சென்னை: சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற கொலை வழக்கில் இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்க இருக்கிறது.

டக்ளஸ் வழக்கு என்ன?

இந்தியாவில் இலங்கை ஆயுதக் குழுக்களுக்கு 1980களில் மத்திய அரசே பயிற்சிகளை அளித்தது. அப்போது ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவும் சென்னையில் தங்கி இருந்தது. இந்தக் குழு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை ஒரு சிறு வாய்தகராறுக்காக துப்பாக்கிய சுட்டுக் கொன்றுவிட்டார் டக்ளஸ். இந்த கொலை வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி ஓடி அங்கே இப்பொழுது அமைச்சராகவும் ஆகிவிட்டார் டக்ளஸ்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணி

இந்த நிலையில் டக்ளஸ் தலைமறைவுக் குற்றவாளி என்று ஏற்கெனவே சென்னை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருப்பதால் அவரைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி புதிய மனுத்தாக்கல் செய்தார். இதனால் இந்த வழக்கு பரபரப்பானது. வேறுவழியின்றி இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி, சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனுத்தாக்கல் செய்தார். மேலும் தம்மை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் தமிழக போலீசார் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணையை நேற்று நீதிபதி ராஜகோபலன் மேற்கொண்டார். பின்னர் தீர்ப்பு நாளை அதாவது 18-ந் தேதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

நாளை கிளைமாக்ஸ்

இலங்கையில் அமைச்சராக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் அவர் தேடப்படுகிற தலைமறைவுக் குற்றவாளிதான். அவருக்கான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய முடியாது என்று சென்னை போலீசார் கூறிவிட்ட நிலையில் "கிளைமாக்ஸ்" காட்சியாக நாளைய தீர்ப்புக்காக அலறிப் போய்க் காத்திருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா!

English summary
A local court on Tuesday reserved its orders on a petition of Sri Lankan Minister Douglas Devananda seeking exemption from personal appearance in connection with a murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X