For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி கோவிலில் இன்று கருடசேவை-ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Google Oneindia Tamil News

Tirumala Tirupati Devasthanam
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர்.

கடந்த 15ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது. இதையடுத்து தினமும் காலையும், இரவும் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று சல்பவிருட்ச வாகனத்தில் மலைப்ப சாமி மாட வீதிகளில் உலா அழைத்து செல்லப்பட்டார்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன. கருட வாகனத்தில் தங்க, வைர நகைகள் அணிந்த ஏழுமலையான், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருப்பதியில் குவிந்துள்ளனர்.

இன்று நடைபெற உள்ள கருடசேவையை காண சுமார் 4 லட்சம் பக்தர்கள் வரலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கருடசேவையின் போது மாட வீதியில் ஏழுமலையான் வீதி உலா வரும் முன், பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருடசேவையை முன்னிட்டு பக்தர்களுக்காக 6 லட்சத்திற்கு அதிகமான லட்டுகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

English summary
Tirumala Tirupati Devasthanam management has made arrangements for the grand conduct of the Garuda Seva festival slated on Friday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X