For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கோவில் இந்திய அமைதிப் படையின் பாலியல் அத்துமீறல் விசாரணை- விரைவில் தீர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

IPKF soldiers in Congo
டெல்லி: காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்ற ஐ.நா. படையில் இடம்பெற்றிருந்த இந்திய ராணுவத்தினரின் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

மீரட்டில் விசாரணை

காங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளனர். 2007-08 ஆம் ஆண்டில் காங்கோவில் பணியாற்றிய இந்திய ராணுவத்தின் 6வது சீக்கியப் பட்டாலியன் பிரிவினர் பெண்களிடம் தவறாக நடந்ததாகப் புகார் எழுந்தது. மொத்தம் 12 அதிகாரிகள் உட்பட 39 ஜவான்கள் இந்தப் பிரிவில் இருந்தனர். 9வது தரைப்படையின் தலைமையகமான மீரட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிரிகேடியர் எம்.எம்.மசூர் தலைமை வகித்தார். ராணுவ அதிகாரிகள் சுனில், பி.வி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஐ.நாவின் டி.என்.ஏ.சோதனை

இந்திய ராணுவத்தினரின் மீது பாலியல் புகார் கூறிய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் டி.என்.ஏ. மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டதில் பல குழந்தைகளிடம் தந்தையின் இந்திய குணாம்சங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு அறிக்கை அனுப்பிய பிறகு இந்த விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு இந்த ராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி இருந்தது.

தொடர் புகார்கள்

2010-ம் ஆண்டு மேஜர் ஒருவர் பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார் என்ற புகாரும் முன்வைக்கப்பட்டது. முன்னதாக 2007-ம் ஆண்ட் ருவாண்டாவில் தங்கத்துக்காக உணவு மற்றும் தகவல்களை இந்திய ராணுவத்தினர் விற்ற என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது

English summary
An entire battalion of the Indian Army is in the dock after allegations in Congo that Indian peacekeepers fathered around a dozen children while posted there on a United Nations peacekeeping mission in 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X