For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் விவகாரத்தால் ரஷிய அதிபரின் இந்திய பயணம் ஒத்தி வைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Putin
டெல்லி: கூடங்குளம் பிரச்சனையால் ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதின் நவம்பர் மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ரஷிய உதவியுடன் அமைக்கபட்டு வரும் கூடங்குளம் அணு உலை விவகாரமும் ரஷியாவின் சிஸ்டெமாவின் ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து செய்யப்பட்டதாலும் புதினின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென புதின் இந்தியாவுக்கே வரமாட்டார் என்றும் ஒரு தகவல் பரவியது.,

டெல்லியில் உள்ள ரஷிய தூதரகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் புதின் வரும் டிசம்பர் மாதம் 24-ந் தேதி இந்தியாவுக்கு வருகை தரஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினின் இந்திய வருகையின் போது ரஷிய கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகமும் புதின் இந்தியாவுக்கு வருகைதர மாட்டார் என்ற செய்தியை நிராகரித்துள்ளது.

ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு உலைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் புதினின் இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்கிறது டெல்லி தகவல்கள்.

English summary
n a sudden and unexpected move, Russian President Vladimir Putin decided to postpone his much-awaited summit meet with PM Manmohan Singh by close to two months. The meet, which was scheduled to take place on November 1 and for which groundwork had been completed during deputy prime minister Dmitry Rogozin's visit to India last week, will now take place on December 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X