For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவிலிருந்து வெளியேறிய எதியூரப்பா புதிய கட்சியை கடன் வாங்குகிறார்

By Mathi
Google Oneindia Tamil News

Yeddyurappa
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா டிசம்பர் மாதம் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் கர்நாடகா ஜனதா கட்சியை தமது கட்சியாக்குவதற்கான நடவடிக்கைகளை எதியூரப்பா மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியது கர்நாடகத்தில்தான்! இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் எதியூரப்பா! ஆனால் சுரங்க முறைகேடு புகாரில் சிறைக்குப் போன பிறகு எதியூரப்பாவுக்கு எல்லாமே இறங்குமுகமாகிவிட்டது! பாஜக மேலிடம் இவரை கைவிட்டுவிட எத்தனையோ முறை முயற்சித்தும் முதல்வர் பதவி மீண்டும் கிடைக்கவில்லை! விரக்தியடைந்து போன எதியூரப்பா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கையோடு டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார்.

கர்நாடக ஜனதா தளம்

இந்நிலையில் பத்மநாபா பிரசன்ன குமார் என்பவரால் பதிவு செய்யப்பட்டிருக்கும் ‘கர்நாடகா ஜனதா கட்சி'யை பேரம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகா ஜனதா கட்சியின் முக்கிய கூட்டம் வரும் நவம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. எதியூரப்பாவின் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அவரையே தலைவராக ‘ஒருமனதாக' தேர்வு செய்ய இருக்கின்றனர்.

சைக்கிள் சின்னம்

பிரசன்னகுமாரை தம் பக்கம் வளைத்திருக்கும் எதியூரப்பா, தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார். இத்துடன் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனராம். கர்நாடகா ஜனதா கட்சிய் பதிவு செய்து வைத்த பிரசன்னகுமார் இப்போது டெல்லியில் செம பிசியாம்!

English summary
Former chief minister B.S. Yeddyurappa has set November 9 as the date for his formal takeover as president of the yet to be launched Karnataka Janata Party (KJP).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X