For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகை விளம்பரத்துக்காக பிகினி உடையில் பிரளயம் கிளப்பிய பிரிட்டிஷ் நடிகை!

Google Oneindia Tamil News

Amy Childs
லண்டன்: பிரபல இங்கிலாந்து டிவி தொடரான தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ் தொடரில் நடித்தவரான நடிகை அமி சைல்ட்ஸ், தானே உருவாக்கிய நகைகளை விளம்பரப்படுத்துவதற்கு கவர்ச்சியைக் கையில் எடுத்துள்ளார். பிகினி உடையில் வந்து போஸ் கொடுத்த சைல்ட்ஸின் அங்க கவர்ச்சிதான் தூக்கலாக இருந்ததாக அவரது கவர்ச்சிப் போஸைப் பார்த்தவர்கள் குதூகலமாக கூறியுள்ளனர்.

அமி சைல்ட்ஸ் நடிகை மட்டுமல்ல, பிசினஸ் பெண்மணியும் கூட. தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து விற்று வருகிறார். தான் லேட்டஸ்டாக உருவாக்கியுள்ள நகைகளை விளம்பரப்படுத்த அவர் பிகினி உடையைத் தேர்வு செய்து கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து கிளுகிளுக்க வைத்துள்ளார்.

லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் 22 வயதான சைல்ட்ஸ், தங்க நிற பிகினியில் தனது மார்பகக் கவர்ச்சி உள்ளிட்ட இத்யாதி இத்யாதிகளை வெளிக்காட்டியபடி நகைகளை அணிந்து போஸ் கொடுத்தார். பாத்டப்பில் படுத்தபடி காட்சியளித்த அவரைப் பார்த்த பலரும் அதிசயித்துப் போயினர்.

தான் வடிவமைத்த புதிய வகை வளையல், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகியவற்றை அணிந்து போஸ் கொடுத்தார் சைல்ட்ஸ்.

சமீபத்தில் தான் தயாரித்த பெர்ப்யூம் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் இதேபோல கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தினார் சைல்ட்ஸ் என்பது நினைவிருக்கலாம். இந்த நகை உள்ளிட்ட பொருட்களை சைல்ட்ஸின் இணையதளத்தின் மூலம்தான் நாம் வாங்க முடியுமாம்...

English summary
As an emerging business woman Amy Childs is showing her savvy side by playing to her strengths. The former star of The Only Way Is Essex launched her very own jewellery range on Wednesday afternoon but may have distracted slightly from the collection. Amy, 22, stripped off and put her curvy body and ample cleavage on display in a gold bikini.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X