For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுங்கட்சியுடன் மோதக் கூடாது.. ஜெ.வை சந்தித்த திட்டக்குடி தமிழழகன்!

Google Oneindia Tamil News

Tamil Azhagan
சென்னை: ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி எப்போதும் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து விட்டு வந்த தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன்.

தேமுதிகவைச் சேர்ந்த மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ சுந்தரராஜனும், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகனும் இன்று காலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பாராட்டிப் பேசி விட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழழகன் அளித்துள்ள பேட்டியில், நான் கேப்டனுக்கும், கட்சிக்கும் எந்தவித துரோகமும் இழைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக எனது தொகுதியில் எந்தவித மேம்பாடுகளும் செய்யப்படவில்லை. இதுகுறித்து நான் முதல் அமைச்சரிடம் 16 கோரிக்கைகள் அடக்கிய மனுவை கொடுத்துள்ளேன். அவர் அதனை நிறைவேற்றி தருவதாக கூறினார்.

ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சி எப்போதும் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும். தமிழக அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கு முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தேன் என்றார்.

English summary
Opposition parties should not confront ruling party, says DMDK MLA Tiitakudi Tamil Azhagan, who met the CM this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X